குமரன்

2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார். இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) இந்த விருதினை வென்றுள்ளனர். ஒரே வருடத்தில் இரு விருதுகளை பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் ...

Read More »

ப்ளூடூத் வசதியுடன் புதிய 2.2 ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ZEB-BT361RUCF என்று அழைக்கப்படும் இந்த ஸ்பீக்கரின் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு மரப்பெட்டி அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பு பெறும் வசதி, USB போர்ட், SD சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனர் ஆகிய அம்சங்கள் உள்ளன. சப்வூஃப்பரின் ஒலி வெளிப்பாட்டு சக்தி 25W ஆகும், மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை ...

Read More »

வினோத் – கார்த்தி- ‘தீரன் அதிகாரம் ஒன்று’

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாக்யுள்ளார். ‘மாயா’ ஒளிப்பதிவாளர் சத்யா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு திலீப் ...

Read More »

விடுமுறை நாட்களில் மெல்பேர்ணில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள்

கிறிஸ்மஸ் மற்றும் Boxing day விடுமுறை நாட்களில் மெல்பேர்ணில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், சுற்றுலா மையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை எத்தனை மணி வரைக்கும் திறந்திருக்கும் என்ற விபரங்களும் போக்குவரத்து அட்டவணை பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இதேவேளை கிறிஸ்மஸ் தினத்தன்று முழுநாளும், 31ம் திகதி பிற்பகல் 6 மணி முதல் 1ம் திகதி அதிகாலை 6 மணி வரையும் பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்திலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Supermarkets Coles: December 25: Closed, December 26: 8.30am-5.30pm, ...

Read More »

தமிழீழ மக்களுக்கு அடேல் பாலசிங்கம் அவர்களின் அவசர அறிவிப்பு

20 மார்கழி 2016 ஊடக அறிக்கை எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ஒன்றில் விதைத்து (புதைத்து), அங்கு அவருக்கான நினைவுத் தூபி ஒன்றைக் கட்டப் போவதாகவும் ...

Read More »

தமிழ்க் கண்ணனின் சாதனை

சிங்கப்பூர் ஆயுதப் படை வாரண்ட் அதிகாரி பள்ளியின் தளபதி ஒருவர் முதன்முறையாகத் தலைமை வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு கண்டுள்ளார். 18 வயதில் இரண்டு ‘O’ நிலைத் தேர்ச்சிகளுடன் இராணுவத்தில் சேர்ந்த அவர், சிறு வயதில் தமது தந்தைக்குத் துப்புரவுப் பணியில் உதவி வந்தார். நல்ல செயல்திறனுடன் கூடிய கடின உழைப்பின் காரணமாக 12 ஆண்டுகளில் வாரண்ட் அதிகாரியாக பதவி உயர்ந்தார் தமிழ்க் கண்ணன்.

Read More »

தனிம அட்டவணையில் நான்கு புதிய தனிமங்கள்!

கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், ‘பீரியாடிக் டேபிள்’ எனப்படும் தனிம அட்டவணையில், புதிதாக நான்கு தனிமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது. புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு பரிசீலித்து, தகுதியிருந்தால், உலகுக்கு அறிவிக்கும். அண்மையில் சேர்க்கப்பட்ட தனிமங்களுக்கு, 113, 115, 117 மற்றும் 118 ஆகிய அணு எண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள் முறையே நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னிசைன் மற்றும் ஓகானிசன். ...

Read More »

உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை!

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தி ரூ.1½ லட்சம் சுருட்டப்பட்டுள்ளது. பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் பணத்தை சுருட்டிவிட்டனர். பணம் எடுக்கப்பட்ட தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் உன்னிகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ...

Read More »

சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை… இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் ...

Read More »

மலேசிய விமானத்தின் தேடல் பணிகள் நீடிப்பதற்கு எண்ணம் இல்லை -அவுஸ்ரேலிய அதிகாரிகள்

காணாமல் போன MH370 மலேசிய விமானம் தற்போது தேடப்பட்டு வரும் பிராந்தியத்தில் இல்லை எனவும், தென் இந்து சமுந்திரத்தின் வடக்கு பகுதியில் தேடப்படுவதற்கு ஆய்வாளார்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேடல் நடவடிக்கையின் அடிப்படையில் தென் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது எம்..எச்.370 விமானம் காணாமல் போனது. இந்த நிலையில். விரைவில் தேடுதல் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் ...

Read More »