ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கான்-ஆஸ்திரேலியரான மக்பூபா ராவி உதவியுடன் அந்த அமைப்பின் கொடூர பிடியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
Read More »குமரன்
வடக்கில் 680 பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் !
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விரைவான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று மெய்நிகர் வழியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே வடக்கு ஆளுநர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். மேலும், “கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர் களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ...
Read More »லொகான் ரத்வத்தைக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் மனு
லொகான்ரத்வத்தைக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
Read More »மனப்பான்மையை மாற்றுங்கள் வாழ்க்கை அழகாகும்…
குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான். பெண்மையின் சிறப்பு “பன்முகத் தன்மை”. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்திடும் ஆற்றல் பெற்றவள் பெண். தன் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாதனை கனவுகளோடு சமூகத்திற்குள் அடியடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இன்று விஸ்வரூப வினாவாய் எழுந்து நிற்பது குடும்பத்தையும், அலுவல் பணியையும் சரியாக சமன் செய்கிறேனா? என்பது தான். ...
Read More »புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா
இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது ராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது. அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா ராணுவம் ...
Read More »உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ ...
Read More »நியூசிலாந்தில் அதிகரிக்கும் கரோனா
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”நியூசிலாந்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்லாந்தில் மட்டும் பெரும்பாலானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக ஆகஸ்ட் மாதத்திலிருந்து கரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதன் காரணமாக கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மக்கள்தொகை நெருக்கம் கொண்ட ஆக்லாந்தில் கடும் ...
Read More »கேட்க நினைப்பதைக் கேளுங்கள்
பிள்ளைக்கு குறித்த பாடசாலையில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை; தான் வாழும் பிரதேசத்தில் குடிதண்ணீர் ஏன் வழங்கப்படவில்லை; பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு செலவு செய்யப்பட்டது; வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்ட முறை என்பதிலிருந்து, பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரிகளைப் பெற்று, தரத்தை உறுதி செய்வது வரை, மக்கள் தகவறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நன்மையடைய முடியும்” என்கிறார் சட்டத்தணியும் வளவாளரும் சிவில் சமூகத்தின் சார்பில் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளவருமான ஐங்கரன் குகதாசன். இவர், தகவல் அறியும் ...
Read More »சஹரானின் அலைபேசி: அனுப்பியது யார்?
ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவகுத்த சஹரானின் அலைபேசியிலிருந்த மதர்போர்டை கொண்டு செல்ல வெளிநாட்டு உளவுத் துறைக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியவந்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் யார் என்று தெரியவரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசியல் ரீதியாக தாக்கக்கூடியவர்களைப் பற்றி மட்டுமே நாங்கள் இன்று பேசுகிறோம் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு ...
Read More »ஊரடங்கு தொடர்பில் அதிரடி அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Read More »
Eelamurasu Australia Online News Portal