குமரன்

ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்

360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிட்சை  செய்ய உள்ளார். இதனால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது. இந்த தொடருக்கு ...

Read More »

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்

  சினிமா பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை நேற்று (27) மாரடைப்பால் காலமானார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சினிமாவில் பாடல் எழுத வரும் முன் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். எம்பில் முடித்தவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்தார். சித்திரப் பாவை டிவி தொடருக்குதான் முதலில் பாடல் எழுதினார். தொடர்ந்து 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார். புதுவயல் என்ற படத்தில் 1992-ல் தனது முதல் பாடலை எழுதினார் அண்ணாமலை. அதன் பிறகு கும்மாளம், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்பட ஏராளமான படங்களுக்கு எழுதினார். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் ...

Read More »

‘எழுக தமிழ்’ ஒரு வரலாற்றுப் பதிவு! அனைவருக்கும் எமது நன்றிகள்!

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தது, ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், வரலாற்றுப்புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில், மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி ...

Read More »

நாடு திரும்பும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 20,000 டொலர்

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக தமது தாய் நாடு திரும்புவதற்கு சம்மதிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 10,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் தற்போது இத்தொகை 20,000 டொலர்களாக ...

Read More »

ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் செய்வதாக அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் எழுத்து மூல வாக்குறுதியையடுத்து எதிர்வரும் ...

Read More »

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை

உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று(27) கையொப்பமானது. கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் ‘பார்க்’ (FARC) அமைப்பு 1964-ம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறது. தென்அமெரிக்காவின் வடமுனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. பல்வேறு பழங்குடிகளைக் கொண்ட கொலம்பியா 1499-ம் ஆண்டு ஸ்பானிய ...

Read More »

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியுள்ளது ஆச்சர்யத்தை கொடுக்கிறதா? ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. இப்படம் தற்போது ‘ஆங்கில படம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ‘ஆங்கிலப்படம்’ என்று மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை ...

Read More »

உலகின் 90 சதவீதம் மக்கள் கெட்ட காற்றையே சுவாசிக்கின்றனர்

உலகில் வாழும் 90 சதவீதம் மக்கள் கெட்ட காற்றையே சுவாசித்து வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 92 சதவீதம் பேர் மாசுபாடு நிறைந்த காற்றையே சுவாசித்து வாழ்வதாக கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு நாம் நினைப்பதுபோல் இல்லாமல் பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்தான் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய அளவில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார அமைப்பினர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை ...

Read More »

கானமழை 2016 நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. Date: Saturday, Oct 01, 2016, 6:00 pm. Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448

Read More »

தியாகி திலீபனின் நினைவு நாள் – 2016

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்த லெப் .கேணல் திலீபனை நினைவு கூறுவோம். நாள்- செப்ரம்பர்-30  -இடம்- மெல்போன் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்.    

Read More »