emurasu

சிறிலங்காவில் இன்னமும் கொடூர சித்திரவதை! இன்று வெளியான ஐநா அறிக்கை!!

சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் முன்னேற்றகரமான மாற்றங்கள் உருவாகும் என்ற எண்ணம் இல்லாமல்போயுள்ளதாக ஐநாவின் இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் விசேட பிரதிநிதியாக சிறிலங்காவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த பென் எமர்சன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியான நீதிமன்ற நடைமுறைகளும் நல்லிணக்கமான சூழலும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி தங்கிநிற்பதாகவும் இன்னமும் கடுமையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதுவித விசாரணகைளுமின்றி பத்து ...

Read More »

கனடாவின் மார்க்கம் நகரத்தில் வன்னி வீதி Vanni Ave

கனடாவின் மார்க்கம் நகரத்தில் வாழும் தமிழர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வீதி ஒன்றுக்கு வன்னி வீதி (Vanni Ave) என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்கம் நகரத்திற்கும் முல்லைத்தீவு நகரத்திற்குமான நட்புறவு உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்ட நிலையில் இவ்வீதி திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

விசா நிராகரிக்கப்படுவோர் விரைவான நடவடிக்கை எடுப்பது அவசியம்!

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது. இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை ...

Read More »

தமிழ் இளைஞர் சிட்னியிலிருந்து நாளை நாடுகடத்தல்! எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார். அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார். எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியப் பெண்ணின் சோகமுடிவு!

இரண்டு குழந்தைகளின் தாயான சுப்றாஜ் தனது நான்கு மாத குழந்தையுடனுன் மேல்மாடியிலிருந்து குதித்து இறந்தமைக்கு அவரது தனிமை உணர்வு தான் காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூலை மாதம் 14 ஆம் திகதி 2016 அன்று நடந்த இச்சம்பவம் பற்றிய விசாரணை முடிவிலேயே நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் மனவழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது என்றும் இதனை சுகாதார பிரிவு கவனத்திற்கொள்ளவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனவழுத்தம் தொடர்பான விசாரிப்புகளின்போது அதுபற்றிய கவலைகளை வெளியிட்டிருக்கவில்லை எனவும் நான்கு தடவைகள் அவரது வீட்டிற்கு ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – பேர்த்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (18-05-2018) அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினை பிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர். முள்ளிவாய்க்கால் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – சிட்னி

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாகநினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசைபின்னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம்செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒரு மணிநேரமாகநடைபெற்றது. தொடர்ந்து நினைவுரையை, முள்ளிவாய்க்காலில் மருத்துவராக கடமையாற்றி ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது. சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் ...

Read More »

மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல்19-04-1988வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது நினைவுநாளும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய விடுதலைக்காக அயராது உழைத்து உயிர்நீத்து மாமனிதர்களாக கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு நினைவு கூரப்பட்டது, இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். 21-04-2018 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிக்கு சென்யூட்ஸ் மண்டபத்தில் வானமுதம் வானொலியின் அறிவிப்பாளர் திரு சிறீறஞ்சன் தலைமையில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத்தேசியக் கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின. அவுஸ்திரேலியத் ...

Read More »

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் விளையாட்டு விழா 2018

வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு ஞாபகார்த்த விளையாட்டு விழா 26 – 01 – 2018 இன்று வெள்ளிக்கிழமை சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் துடுப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் வலைபந்தாட்டம் மற்றும் கிளித்தட்டு, முட்டி உடைத்தல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஏழு மணிவரையும் நடைபெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உலகம் சுற்றி மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் சுரேஸ் ஜோக்கிம் உம் கலந்துகொண்டு, ...

Read More »