Tag Archives: ஆசிரியர்தெரிவு

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்  மரணமடைந்த  நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இப்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவர் கொவிட் 19 காரணமாக இறந்திருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டு அதன் முடிவுகளின் படி, ...

Read More »

பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ?

தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரையில் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவில்லை . மாறாக அறிக்கையில் குறிப்பிடப்படாத பல அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார். குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ...

Read More »

ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை ...

Read More »

கார்பன் உமிழ்வைக் குறைக்க நியூசிலாந்தின் வழியைப் பின்பற்றுங்கள்!

உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் உரையாற்றினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். ...

Read More »

தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம்

மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அவரது ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: அண்மையில் ரெலோவின் பேச்சாளர் பதின்மூன்றாவது திருத்தத்தையும் மாகாணசபையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். ...

Read More »

ஈராக்கில் பரபரப்பு – பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்  தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஈராக் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ...

Read More »

ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளில் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொவிட் -19 வைரஸால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் . தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு அப்பால் தற்போது காற்றின் மூலமும் இத்தொற்று பரவுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமல்ல இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. ...

Read More »

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் ; உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல் ...

Read More »

தமிமீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக ...

Read More »