கார்பன் உமிழ்வைக் குறைக்க நியூசிலாந்தின் வழியைப் பின்பற்றுங்கள்!

லக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் உரையாற்றினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும் கார்பனை விலை நிர்ணயம் செய்யவும், காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளை கட்டாயமாக்கவும், புதைபடிவ எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் உலக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.