இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொவிட் -19 வைரஸால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் .

தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு அப்பால் தற்போது காற்றின் மூலமும் இத்தொற்று பரவுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸின் புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமல்ல இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளது. முந்தைய திரிபு ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு பரவக்கூடியது என்பதுடன் புதிய திரிபானது ஒருவரிலிருந்து 5-6 பேர் வரை பரவக்கூடியது என பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.