Tag Archives: ஆசிரியர்தெரிவு

காசா மீது தாக்குதல்- அமெரிக்கா, இங்கிலாந்தில் கண்டன போராட்டம்

பாஸ்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் உள்ள மைதானத்தில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். காசா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிலடெல்பியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் உள்ள மைதானத்தில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். காசாவில் நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக ...

Read More »

நினைவு தூபியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17), முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் சுடர் ஏற்றுவதற்கும், பலருக்கு எதிராக தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், இனப்படுகொலை வாரத்தின் ஆறாவது நாளான இன்று (17)  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்குச் சென்று, சுடரேற்றி ...

Read More »

தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் இன்று வரை இடம்பெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக்கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழ சர்வதேச தரப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்” என கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: “இலங்கையின் ஆட்சியானது தொடர்ச்சியாக தமிழ் சமூகத்தை மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே முயலுகின்றது. அதன் சாட்சியமே முள்ளிவாய்க்கால் நினைவுக் கல்லை காணாமல் ஆக்கி நினைவு தூபியையும் இடித்து அழித்த ...

Read More »

யாழில் 9 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோத னைக்குஉட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் என 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ...

Read More »

அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்தும் புதிய சட்டம் !- மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ்நிலை முழுதும் கூட காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்துடையது என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த சட்டத்திருத்தம், ஆஸ்திரேலிய அரசு அகதிகளின் விசாக்களை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதே சமயம், சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அகதிகளை நாடுகடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா ரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறைப்படுத்தப்படுவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. குணநலன் அடிப்படையில், பாதுகாப்புக்கு ...

Read More »

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி கோரப்பட்ட வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கோரிக்கை விடுக, வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொரோனா அலை உருவெடுத்துள்ள நிலையில் இலங்கை அரசினால் ; முடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆ.ர் பரிசோதனை ...

Read More »

ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை மட்டம்

அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர். காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் ...

Read More »

பயண தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா தரை இறங்கியது!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்களை சுமந்து கொண்டு முதல் விமானம் ஆஸ்திரேலியா போய்ச்சேர்ந்தது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனவழிப்பு சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுங்கள்!

இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொவிட்-19 ...

Read More »

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், சிறிலங்காவை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன்போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

Read More »