Tag Archives: ஆசிரியர்தெரிவு

யாழ். போதனா வைத்தியசாலையில் நிரம்பும் கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது வைத்தியசாலை தற்போதைய நிலவரத்தின்படி வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். ...

Read More »

படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் ...

Read More »

யாழில் பேருந்து விபத்து: 24 ​பேர் படுகாயம்

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பேருந்து, கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பேருந்து மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

சுகாதார அமைச்சு கைமாறுகிறது?

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் ...

Read More »

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ...

Read More »

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று முன்திகம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்த கர்ப்பிணிப் பெண் திருமணம் முடித்து ஒரு ஆண்டு என்றும் அவர் சம்பவதினம் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்து நிலத்தில் சரிந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று வெளிநோயாளர் பிரிவிலேயே மருத்துவ அறிக்கையிடப்பட்டது. அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ...

Read More »

உலகின் மிகச் சிறிய குழந்தை: 13 மாத சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது

212 கிராம், கிட்டத்தட்ட ஒரு ஆப்பிள் பழத்தின் எடையில் பிறந்த உலகின் மிகச் சிறந்த குழந்தை என அறியப்படும் சிங்கப்பூரின் கெவெக் யூ சுவான், 13 மாத கால சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளது. சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூன் 9 ஆம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 25 வார கர்ப்ப காலத்தை நிறைவு செய்திருந்த நிலையில் குறைப்பிரசவமாக அக்குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அந்தக் குழந்தையின் எடை வெறும் 212 கிராம் மட்டுமே இருந்தது. 24 செ.மீ நீளம் ...

Read More »

தடுப்பூசி தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம்

கொரோனா தடுப்பூசி தொடர்பில் காணப்படும் பிரச்சினை மற்றும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1906 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். வயதானவர்கள் அல்லது பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமது பெயர் மற்றும் முகவரியை குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவித்து பதிவுசெய்துகொள்ள முடியும்.

Read More »