Tag Archives: ஆசிரியர்தெரிவு

திலீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கின்றது தமிழர் தாயகம்!

தியாதீபம் திலிபன் அவர்களது 34 ஆவது நினைவேந்தலை பொது வெளியில் முன்னெடுக்க இலங்கை அரசு தடுத்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் வீடுகள் தோறும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எனது குடும்பத்துடன் அனுஸ்டித்த சூநினைவேந்தல் எமது உரிமை அதனை யாரும் தடுக்க முடியாதென தமது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பலரும் பிரசுரித்தும்வருகின்றனர்.   இதனிடையே தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினார்.   வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய ...

Read More »

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்!

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்  வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே ...

Read More »

என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் உள்ளோம்!

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. 2018ல் இத்தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த ஆஸ்திரேலிய திட்டமிட்டிருந்த நிலையில், அந்நடவடிக்கை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கான தொடர் சட்டப் போராட்டத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட ...

Read More »

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிப்பு

சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் நடமாடுவதை இந்த காலடி தடங்கள் சுற்றிக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மிகவும் பழமையான மனித கால் தடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, நியூமெக்சிகோ மாகாணத்தில் புதை படிவ காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் ...

Read More »

சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது!

சர்வதேச பொருளாதார உடன்படிக்கையொன்றில் சீனா இணைந்துகொள்வதை கடுமையாக எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது டிரான்ஸ் பசுபிக் ஒத்துழைப்பிற்கான முழுமையான முற்போக்கான உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்கு சீனா முயன்றுவருகின்றது. எனினும் ஆசிய நாட்டிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக சீனா பார்லி மற்றும் வைன் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் இந்த உடன்படிக்கையில் சீனா இணைந்துகொள்வதை எதிர்க்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன்தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுடன் தான் இணக்கப்பாட்டுடன் ...

Read More »

சிறையில் இருக்க வேண்டியவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில்!

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொள்ளையடித்தவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதுன் தற்போது உண்மையை கூறுபவர்கள் அங்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) தெரிவித்துள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிரில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் கொள்ளை, மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டனர். எனினும் தற்போது ஈஸ்டர் தாக்குதல் பற்றி உண்மையை வெளியிடுவோர் அன்டிஜன் மோசடி தொடர்பான உண்மையை கூறுவோர். ...

Read More »

பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் ...

Read More »

நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்!

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

Read More »

செப்டெம்பர் 11 தாக்குதல்; நினைவேந்தல் நிகழ்வில்…

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலங்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தியையொட்டி, அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார். 2001 செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்கடனின் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றை இலக்கு வைத்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரையொட்டி, ஐக்கிய நாடுகள் ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் விடுதலை?

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார். ராஜபக்‌ஷ குடும்ப பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்காது என்றார். கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம்  ...

Read More »