நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொள்ளையடித்தவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதுன் தற்போது உண்மையை கூறுபவர்கள் அங்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிரில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் கொள்ளை, மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டனர்.
எனினும் தற்போது ஈஸ்டர் தாக்குதல் பற்றி உண்மையை வெளியிடுவோர் அன்டிஜன் மோசடி தொடர்பான உண்மையை கூறுவோர். என்.எம்.ஆர்.ஏவில் விபரங்கள் அழிக்கப்பட்டமை பற்றி தெரிவிப்போர், என உண்மைகளை கூறுகின்றவர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்படுகின்றனர்.
கொள்ளை, மோசடி, ஊழல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தண்டனை வழங்க முடியாது போனால் தற்போது இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருக்க வேண்டியவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உடன்பாடுகளை செய்துக்கொள்ளும் அணியினர், குற்றங்களை மூடி மறைத்ததால, அன்று தண்டனை வழங்க முடியாமல் போனது எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.