Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 20)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஈழத்தமிழர் மெல்பனில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது  

Read More »

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்

அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும் என மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.12 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ...

Read More »

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு அனுமதி

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார். இதனால் இந்த வருட ஆலய உற்சவத்தினை சிறப்பாக ...

Read More »

குயின்ஸ்லாந்தில் 16 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 199 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 199 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 111 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 50 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் ...

Read More »

‘சீனாவின் அடிமை நாடாக இலங்கை மாற நேரிடும்‘

வெளிநாடுகளிடம் இருந்து  பெறப்படும்  கடன்களால் சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாக இலங்கை மாற வேண்டிய நிலை ஏற்படும்  என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தில்நேற்று(3) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது”  இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் செலுத்தி  வந்த நாம் அந்த நற்பெயருக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றிய வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ...

Read More »

கருணாவை கைது செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார் அரந்தலாவையில் ...

Read More »

விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருகின்றாரா?

எதிர்காலத்தில் அரசியலுக்கு நல்ல தலைவர்கள் வருவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட குடும்பத்தின் நன்கு படித்த தலைவர் ஒரு புதிய அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “நீங்கள் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதற்கு வழி வகுக்க முயற்சிக்கிறீர்களா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், “யாரோ ஒருவராக ...

Read More »

’என் சாவுக்கு காரணம்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ...

Read More »

பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் ...

Read More »