கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதி இராணுவத்தினரின் முற்றுகைக்குள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் இராணுவத்தினரின் பின்னால் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இராணுவத்தினர் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களில் பிரசன்னமாகியிருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சம்பந்தன் கூறிய கருத்தை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது!
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (16)தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...
Read More »கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!
கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னரும் இந்த கப்பல் சேவையை நடத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் அதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்காததால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.
Read More »கறுப்புக்கொடிகாட்டிய சிவாஜியின் கையைப் பிடித்தார் மைத்திரி!
அரசியல் கைதிகளின் வழக்குகளை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தீர்வு வழங்காத ஜனாதிபதியின் யாழ் வருகையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்துதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் கறுப்புக்கொடியுடன் நின்றவர்களைக் கண்டு காரில் இருந்து இறங்கிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நோக்கி கும்ப்பிட்டவாறு வந்தார். ஜனாதிபதிக்குக் ...
Read More »வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்
வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிக்கு அவசர கடிதம்!
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ...
Read More »சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார். இதனையடுத்து மனுமீதான விசாரணையை, ...
Read More »கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளது!
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாள் வட்டுவாகல் மற்றும் வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 271.62 ஏக்கர் நிலப்பரப்பு காணி எடுத்தல் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த நிலப்பரப்பானது, ஒரு பகிரங்கத் தேவைக்காக காணி எடுத்தல் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர்.
Read More »புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!
தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான ரஜீவ் ராஜேந்திரன் (வயது-32) என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை குறித்து ...
Read More »