தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார்.
தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal