பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த வரைவு உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்கா நாடாளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம்! ?
நாடாளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆளும் தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் தரப்பினரினும் ஊடகவியலாளர் சந்திப்பும் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள்!
சிறிலங்கா நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர். ...
Read More »நத்தையை உட்கொண்ட அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் மரணம்!
மூல வியாதிக்காரர்கள் நத்தையை மருந்தாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். நத்தையை முறையாக சமைக்காது, இறைச்சியை உட்கொண்டால் மிகப்பெரிய ஆபத்தான நிலையை அடைவீர்கள் என்பதற்கு அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் சிறந்த உதாரணம். ஒரு முறை நண்பர்கள் விட்ட சவாலுக்காக தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையை உட்கொண்ட சாம் பல்லார்டு என்பவர் பல்வேறுபட்ட பாதிப்புக்குள்ளாகி, 8 வருடங்களுக்குப் பின்னர் மரணமாகியுள்ளார். நத்தையை சாப்பிட்ட உடனேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பில் ஆரோக்கியம் அடைந்தவர், பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவரால் நீண்ட காலம் ...
Read More »2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்!
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் ...
Read More »பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசாங்கம்!
சிறிலங்கா ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை ...
Read More »6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது!
அஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காரை ஏற்றி 6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெல்பர்னின் போர்க் ஸ்டிரீட் பகுதியில் இந்த (Bourke Street) சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயது ஜேம்ஸ் கர்கஸூலஸ் (James Gargasoulas) என்பவர் வீதியில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி பலரை கொலை செய்தார். அதில் 6 மாத சிசு உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் மீது 33 குற்றங்கள் சுமத்தப்பட்டன. எனினும் ஜேம்ஸ் தனது குற்றங்களை மறுத்துள்ளார். ...
Read More »பொதுத் தேர்தலில் நாமல் குமார “மொட்டில்” போட்டி!
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு இயக்குனர் நாமல் குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வழங்கியதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார். சுற்றாமலை பாதுகாக்கவும் ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கவுமே தான் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் ...
Read More »மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று (12) எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104 ஆவது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11) ஆகிய விடுமுறை தினங்களைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (12) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று (12) அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை. அத்துடன் எதிர்வரும் இரு வார காலங்களுக்கு குறித்த அகழ்வுப் பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழி அகழ்வு ...
Read More »`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்?’ – ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்
ஆஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் நேற்று(12) ஆஜர்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 100 பேர் தாங்கள் வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியதால், ஸ்ட்ராபெர்ரி விற்பனையும் தடைபட்டது. இந்த ...
Read More »