கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியது. மணிக்கு 800 ஏக்கர் காட்டுப்பகுதியை தீ சாம்பலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர். ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி ...
Read More »இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய ஆணைக்குழு விஜயம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன் தினம் (11.10.2019) இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவந்ததன் அடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இரணைதீவு மக்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு ...
Read More »ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட நடவடிக்கை !
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் சீட்டுக்களை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன் அச்சிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்காளர் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அதேபோல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு தற்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கமைய இந்த முறை சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் ...
Read More »மத்தியஸ்தம் செய்ய வரும் இம்ரான் கான்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை தீர்ப்பதற்கு மத்தியஸ்தத்தில் ஈடுபட உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஈரான் வரவேற்றுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் கூறும்போது, “ நாங்கள் சவுதி அரேபியாவுடன் எது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். சவுதி அரேபியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் சவுதியுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை தயாராக இருக்கிறோம். எங்கள் கதவுகள் மத்தியஸ்தத்திற்காக திறந்தே உள்ளன. நாங்கள் எந்த மத்தியஸ்தரையும் நிராக்கரிக்கவில்லை” என்றார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சனிக்கிழமையன்று பாகிஸ்தான் ...
Read More »எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை!
‘நான் அரசியல் சாயமற்றவன். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மார்க்கமே எனது பணி” என்று தெரிவித்த பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, என் மீது அரசியல் சாயம் பூசப்படுகிறது என்றார். பொறுப்புமிக்க ஆட்சிக்கான குடிமக்கள் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த, “தேர்தலில் எவ்வாறு மக்கள் பங்கேற்பது” எனும் தொனிப்பொருளிலான மாநாடு, கொழும்பு இலங்கை மன்றத்தில், நேற்று(10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் அதிகமான இளைஞர்கள் இருக்கும்போது வயதானவர்களே வேட்பாளராகின்றனர். தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் அவர்கள் வழங்கிய ...
Read More »மாடியிலிருந்து தவறி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி!
கொழும்பு, யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றின் 33 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக காாவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 52 வயதுடைய சுற்றுலாப் பயணியொருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
Read More »விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி என குற்றச்சாட்டு!
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார். மலேசிய பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் இவர்களை கண்காணித்து வந்ததாக அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார் ...
Read More »காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக ...
Read More »கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனித்து வேட்பாளரை களமிறக்காத நிலையில் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி இருந்து வந்தது. இந் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால டிசில்வா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ...
Read More »