ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் சீட்டுக்களை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன் அச்சிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது வாக்காளர் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
அதேபோல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு தற்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கமைய இந்த முறை சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமைவதோடு இது வரலாற்றில் மிக நீண்ட வாக்குச் சீட்டாகவும் அமைந்துள்ளது.