Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம்?

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப் பதற்கான காரணத்தை பொது சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கொழும்பு மாவட்டம் முழுவதும் பரவி காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24 ஆம் திகதி அன்று வெளியான கொரோனா அறிக்கையை ஆய்வு செய்யும் போது இந்த நிலைமை தெளிவாகிறது என வைத்தியர் ஹரித அலுத்கே ...

Read More »

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம் !

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரத்தைப் போட்டுத் தந்துள்ளது. அந்த அத்திவாரம் இன்றும் அப்படியே உள்ளது. அந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி எமக்கான தனித்துவமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குத் திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இளங்கலைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஈழத்திரைச் ...

Read More »

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து பிரிட்டன் கவலை

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் தனது கரிசனைகளை தெரிவித்துள்ளது என இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அடுத்தவாரம் வெளியாகவுள்ள ஐநாவின் அறிக்கையில் இது குறித்து ஐநா மனித உரிமை பேரவைக்கான விபரங்கள் அடங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More »

தீவகத்தில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்

தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Read More »

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது தான்அதன் வகைகளை அடையாளம் காண முடியும். எனவே மரபணு ரீதியிலான சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் ...

Read More »

கூகுள் நிறுவனம் +ஆஸ்திரேலிய அரசு – முற்றும் மோதல்! காரணம் என்ன?

செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்துள்ளதால் மோதல் முற்றியுள்ளது ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் ...

Read More »

நில அபகரிப்பு தொடர்பில் நம்பகத்தன்மையான ஆவணப்படுத்தலும் ஆய்வும் மிக அவசியம்

நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் கட்சிகளுக்கு இடையிலான காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம் திருநெல்வேலி இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். “சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை ...

Read More »

இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 ...

Read More »

மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்!

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ...

Read More »

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை ஏன்?

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கூகுள்; முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களிற்கு ரோயல்டி செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள்; இந்த எச்சரிக்கையை வெளியி;ட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் ...

Read More »