Tag Archives: ஆசிரியர்தெரிவு

மூளைச்சாவு அடைந்துவிட்டாரா வடகொரிய அதிபர் கிம்?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்கு மருத்து ஆலோசனை வழங்க மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன அதேசமயம், கடந்த வாரத்திலிருந்து அதிபர் கிம் ஜாங் ஓய்வெடுக்கும் வோன்சான் நகரில் உள்ள மாளிகை வளாகத்தில் அவர் பயன்படுத்தும் பிரத்யேக ரயில் தயாராக இருப்பதாக ெசயற்கக்கைக்கோள் புகைப்படம் தெரிவிக்கிறது. அதிபர் கிம் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகள் வருவதால் எதையும் உறுதி செய்யமுடியவில்லை. வட கொரியா அதிபர் கிம் ...

Read More »

கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் அகதிகள்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கின்றது. அகதிகள் சார்ந்து இயங்கும் தொண்டு அமைப்பிடம் உதவிக்கோரி வரும் தொலைப்பேசி அழைப்புகள் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில்(Bridging Visas) உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடும் எனக் கூறப்படுகின்றது. “ஒரு நாளைக்கு 40- 60 அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்தவர்கள்,” எனக் ...

Read More »

யாழ் மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை சிறிலங்கா காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இனம் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் சிறிலங்கா காவல் துறையால் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி – திணறும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, 29 லட்சத்து 20 ஆயிரத்து 738 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசின்  தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ...

Read More »

முதியவரைத் தாக்கிய சிறிலங்கா காவல் துறை!

நாங்களே 3 மாதம் தண்ணி இல்லாம இருக்கம் உனக்கு தண்ணி வேணுமோ – முதியவரைத் தாக்கிய வட்டு. காவல் துறை யாழ். சித்தங்கேணி பகுதியில் குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை காவல் துறையை மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்) கால்  உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று நண்பகல் சித்தங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் தண்ணீர் எடுப்பதற்கு முகக் கவசம் ...

Read More »

மனிதாபிமான ரீதியில் அனுமதி வழங்கியது அவுஸ்திரேலியா!

அமெரிக்காவில் உயிரிழந்த மகனின் உடலை பார்க்க முடியாமல் தவித்த தாய் அமெரிக்காவில் உயிரிழந்த 20 வயது மகனின் இறுதிசடங்கில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை மனிதாபிமான அடிப்படையில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்குண்டுள்ள தாயார் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்காவில் கடந்தவாரம் இராணுவபயிற்சியின் போது திடீர்என மரணித்த லியோன் சியுபொலி என்ற இளைஞனின் தாயாரே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்க இராணுவத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் இணைந்துகொண்ட லியோன் வோசிங்டனில் 12 ம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது தாயாரும் ...

Read More »

இலங்கை  ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு!

இலங்கை  ரீதியில் இன்று (25) மற்றும் நாளை (26) ஆகிய இரு தினங்கள்  முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேற்று (24) இரவு 8.00 முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிற ஏனைய 18 மாவட்டங்களில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும், இரவு 8.00 மணி தொடக்கம் காலை 5.00 ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி உறுப்பினர் கடற்கரையில் சடலமாக மீட்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் செந்துாரன் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். தொண்டமனாறு -மயிலியதனை மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று இரவு அனாதரவாக கிடந்த அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து காவல் துறை, மற்றும் உறவினர்கள், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தீவிர தேடுதலில் இறங்கியிருந்தனர். ஆனாலும் அவர் மீட்கப்படாத நிலையில் இன்று அதிகாலை தொண்டமனாறு கடற்கரையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More »

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன?

ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பலரும் பிறரிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தற்போது அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் டிஷ்யூ பேப்பர், முகக் கவசம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்ளன. இவற்றில், முகக் கவசத்தில் கொரோனா வைரஸ் 7 ...

Read More »

சிறிலங்காவில் இளம் தாய்க்கு கொரோனா – சிசு பரிதாப மரணம்!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் டி சொய்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக அவரது சிசு உயிரிழந்துள்ளது.சிசுவின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார் இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் ...

Read More »