கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணான அவர் டி சொய்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக அவரது சிசு உயிரிழந்துள்ளது.சிசுவின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
109 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
299 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal