அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கும் திட்டம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது. வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை பயனாளர்களிடம் அறிமுகப்படுத்துவதில் அரசு நாட்டம் காட்டுகிறது. இதனை ஊக்குவிக்கும் முகமாகவே விக்டோரிய அரசாங்கம் Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு 50 டொலர்களை வழங்கவுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் Energy Compare இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு 50 டொலர் சன்மானம் வழங்கப்படுகிறது. இதேவேளை இந்த புதிய இனாம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மதன் கார்க்கி உச்சத்தை எவ்வாறு தொட்டார்? வைரமுத்து
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு கவிப்பேரசு வைரமுத்து தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக விவரித்தார். தஞ்சாவூர் பாரத் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய வைரமுத்து, “என் முதல் மகன் மிகவும் நன்றாகப் படிப்பான். அவன் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பான். என் இரண்டாவது மகன் ஓரளவுக்குப் படிப்பான். 65 – 75 மதிப்பெண் வாங்குவது வழக்கம். ஆனால், ஒரு முறை இரண்டு பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவில்லை. நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். என் மனைவி பி.ஹெச்.டி முடித்தவர். நான் முதுகலை முடித்தவன். ...
Read More »மகிந்தவுக்கு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
தம்மால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தமது நாளிதழின் சிரேஷ்ட ஆசிரியர்களை தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது. அந்த ஊடக நிறுவனத்தனால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் இலங்கையில் இருக்கும் தமது செய்தியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் கோரியுள்ளது. மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றினால் ஊடக சந்திப்பொன்றில் தமது ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Read More »விஜயகலாவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக!
விஜயகலாவின் இராஜாங்க அமைச்சர் பதவியை தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசியலமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ...
Read More »இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து அருகில் உள்ள சிலாயர் தீவுக்கு படகில் 139 பேர் சென்றுள்ளனர். கரையில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 74 பேர் உயிருடன் ...
Read More »`தனியாளா போராடுறேன்’ – ரேவதி
‘ஒரு நடிகையான எனக்கே இப்படி நடக்குது. என் குடும்பத்தினர் நிம்மதியா தூங்கியே ஒன்றரை வருஷமாகுது; யாருக்கும் நிம்மதியில்லை. அதையும் எதிர்த்து நான் தனியாளா போராடிகிட்டு இருக்கேன். இதே சாதாரண ஒரு பெண்ணுக்குப் பிரச்னை வந்தால் எப்படி உரிய நியாயம் கிடைக்கும்? இனி ‘அம்மா’வில் நான் உறுப்பினராக இருந்து என்ன பயன்?’ ” என்று அந்த நடிகை வருந்துகிறார். நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப்பை, மீண்டும் அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்திருந்தார், தற்போது தலைவர் ...
Read More »ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை!
1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிலிப் வில்சன் என்ற அந்தப் பேராயர் குற்றவாளி என்று ஒரு ஆஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. தற்போது அவர் 12 மாதம் சிறைவைக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் மேஜிஸ்திரேட் கூறியுள்ளார். எனவே, அவர் 12 மாதமும் வீட்டுச் ...
Read More »பிஸ்கட் கொடுத்தே சிறுமி ரெஜினாவை காட்டுக்கு அழைத்து சென்றனர்!!
வட்டுக்கோட்டை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஷன் ரெஜினா, திட்டமிடப்பட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட சிறுமியின் சித்தப்பா உறவு முறையிலான 22 வயதுடைய பிரதான சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதனையடுத்தே கொல்லப்பட்ட சிறுமியின் மாமா உறவு முறையிலான 17, 18 வயதுகளை உடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். பின்னர் கைது செய்யப்பட்ட இந்த மாமா உறவு ...
Read More »அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் வடகொரியா பயணம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர். இதையடுத்து, வடகொரிய அதிபர் தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் திகதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ...
Read More »அவுஸ்திரேலியா-இந்தியா நேரடி விமான சேவை அதிகரிக்கப்படுகிறது!
அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கிடையில் சமீபத்தில் இதுகுறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்திய சுற்றுலாப் பயணிகளினால் அவுஸ்திரேலியாவுக்கு பாரியளவிலான வருமானம் கிடைத்துவரும் வருவதாகவும் இதனால் இருநாடுகளுக்கும் இடையில் அதிகளவிலான விமான சேவைகள் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது Air India விமான நிறுவனமும், codeshare airline Jet Airways-உடன் இணைந்து Qantas நிறுவனமும் ...
Read More »