மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இவர்களை பற்றி தகவல் தாருங்கள்!
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த தகவல்களை காவல் துறையினர் கோருகின்றனர். மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா பாத்திமா லத்தீஃபா மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அப்துல் காதர் பாதிஃமா காதியா மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு காவல் துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Read More »விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவு செய்தல் விமான பயணத்திற்கான நாளில் மாற்றத்தை மேற்கொள்ளுதல் ஆசன ஒதுக்கீது விமானம் புறப்படுதல் மற்றும் வரும் நேரங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ளுதல் முதலானவை இந்த அலுவலக சேவையில் இடம்பெறுகின்றன. மட்டக்களப்பு கம்பஹா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் குருநாகல் வவுனியா வென்னப்புவ பேராதனை ஆகிய ...
Read More »செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்!
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் ...
Read More »தற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயம்?
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறித்த தாக்குதலை நடத்த வந்தவரை தேவாலய நிர்வாகத்தினர் சந்தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முற்பட்டபோது அவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டவரை தேவாலய ஊழியர்கள் தேவாலயத்திற்குள் இருந்துவெளியேற்றிய நிலையில் மீண்டும் அவர் தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில் அவர் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கும்போதே குண்டை வெடிக்கச்செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை கொலையாளி மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தினை இலக்குவைத்தே வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடந்த ...
Read More »யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் ?
யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கில் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதணை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி ...
Read More »தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை! – நியூஸிலாந்து பிரதமர்
நியூஸிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இக் கருத்து தொடர்பில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸின்டா ஆர்டென், இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து கிரைஸ்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், ...
Read More »பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலிய பிரஜைகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலி!
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்கள இனத்தவர் பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களான இவர்கள் தமது பெற்றோரை பார்க்க இலங்கை சென்றுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற போது Manik Suriaaratchiயின் கணவர் Mawjood வாகனத்தை நிறுத்த சென்றிருந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அவுஸ்திரேலிய பிரதமர் Scott ...
Read More »வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சாவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
Read More »மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகள்?
கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் பிரபல ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ...
Read More »