தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை! – நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இக் கருத்து தொடர்பில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸின்டா ஆர்டென், இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்ல‍ை எனவும், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூஸிலாந்து கிரைஸ்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதலில் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமா அத் மற்றும் ஜே.எம்.ஐ ஆகிய அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.