மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இது பற்றி தெரியவருவதாவது
குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் போதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த பஸ்வண்டியில் எறி மட்டக்கள்ப்பு பொலிஸ் தலைமையத்துக்கு அருகில் 21ம் திகதி அதிகாலை 2. 17 மணிக்கு இறங்கி வாடகை ஆட்டோ ஒன்றில் நகரப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசலுக்கு 2.35 மணியளவில் சென்று பின் பள்ளிவாசல் வெளிக் கதவு பூட்டியிருப்பதால் அந்த கதவுக்கு அருகில் படுத்துள்ளார்
இதன் பின்னர் 4.15 சுபோ தொழுகைக்காக பள்ளி வாசல் மெலவி பள்ளிவாசல் கதவை திறந்ததும் அங்கு சென்று அங்கு குளித்து ஆடை அணிந்துக் கொண்டு தொழுத பின்னர் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8.34 மணிக்கு அங்கிருந்து குண்டு பொதியுடன் வெளியேறி மட்டு தலைமையக தபாற்கந்தோருக்கு அருகில் நடந்து வந்துள்ளார்
அதனை தொடர்ந்து அங்கிருந்து வல்லோன் (ஆதராவீதி) வழியாக மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலய முன் பகுதிக்கு 8.45 மணிக்கு வந்தடைந்து அதற்கு முன்னால் எதிரே உள்ள மரம் ஒன்றில் அருகில் மதில் பகுதியில் குண்டு பொதியுடன் இருந்து களைப்பாறியுள்ளார்.
மீண்டும் அங்கிருந்து 8. 54 மணிக்கு எழுந்து தெவாலய பகுதிக்கு சென்று வாகன தரிப்பிடத்தில் ஜெயக்கொடி என்பவரிடம் தேவாலய ஆதாரணை எத்தனை மணிக்கு முடியும் கேட்டு வினாவிய பின்னர் ஆலயத்திற்குள் சென்று முஸ்லீம் மதத்தில் இருந்து கிறிஸ்தவமாதம் மாற வந்திருப்பதாக தெரிவித்ததையடுத்து மதம் மாற்ற ஞானஸ்தானம் செய்ய வேண்டும் என தண்ணீர் தெளிப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்கு அங்கிருந்த ஒருவர் சென்றுள்ளார்
அதன் பின்னர் 9.03 மணிக்கு தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சி.சி.டி கமராவின் உதவியுடன் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது
குறித்த தற்கொலையாளி பிரயாணம் செய்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தனியார் பஸ்வண்டி சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பஸ்வண்டிக்கு ஆசனப்பதிவு செய்தவர் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
ஹாறான் அமலவியின் மாமியார் மாமனர் மற்றும் தங்கை உட்பட 3 பேரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தற்கொலையாளி அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பான காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்