Tag Archives: ஆசிரியர்தெரிவு

திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபத் உள்ளது. திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட் ...

Read More »

புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி மறுப்பு

புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிடு வதற்கு அனுமதி வழங்கப்படாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்தார்.

Read More »

ஐம்பது பக்க ஆவணத்தினை பிரிட்டனின் தடைகள் தொடர்பான திணைக்களத்திடம் கையளித்தது சர்வதேச அமைப்பு

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிச்சயமற்ற நிலையில் ஈராக்கிய குடும்பம்

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற மேல்முறையீடும் தோல்வியில் முடிந்துள்ளது. ஈராக்கிய அகதியான Fares Al Kilaby ஆஸ்திரேலியாவில் கடந்த 2013ம் ஆண்டு படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். தனது தாய்நிலத்தை விட்டு மிகவும் மோசமான வன்முறை நிகழ்ந்த காலத்தில் அதிலும் ஐ.எஸ். வளர்ந்து வந்த காலத்தில் ஈராக்கிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் Fares மற்றும் அவரது குடும்பம் தஞ்சக்கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டை நிராகரித்ததால், ...

Read More »

முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற சிறிலங்கா காவல் துறை உத்தரவு

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி காவல் துறை இன்று (10.04.2021) விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெற்றி வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது குறித்த நபரின் சொந்தப் பெயரை வைக்குமாறும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றி வீதி என பெயிடப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுதொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு ; அமைவாக கிளிநொச்சி காவல் துறை இன்று சனிக்கிழமை ...

Read More »

இளவரசர் பிலிப் மரணத்துக்கு ஹாரி – மேகன் இரங்கல்

பிரிட்டன் இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் மறைவுக்கு இளவரசர் ஹாரி மறும் அவரது மனைவி மெக்கன் மார்கெல் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப், ராணி எலிசபெத்தைத் திருமணம் செய்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். இளவரசர் பிலிப் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத்துக்கு உற்ற துணையாக இருந்து வந்தார்.. இந்த நிலையில் தனது 99 வயதான இளவரசர் பிலிப்ஸின் மரணமடைந்ததாக இங்கிலாந்து ...

Read More »

சஹ்ரானின் பெண்கள் பாசறை : இருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், பெண்களுக்கு பயிற்சியளித்ததன் பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர். அவ்வாறு உறுதிமொழி எடுத்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த ஒருவருமெ இருவர்,   பயங்கரவாத புலனாய்பு தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரான் கடந்த 2018ஆம் ஆண்டு பயிற்சிமுகாம் ஒன்றில் பெண்களுக்கு பயிற்சியளித்து அவர்கள் உறுதிமொழி செய்தனர் இதன்போது அவர்களுக்கு உணவு வழங்கிவந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த 44 வயதுடைய முஹமட் இர்பான் ...

Read More »

மைத்திரி- விமல் இரகசிய சந்திப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இ​தேவேளை,சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த 8 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில், மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். அதன் ...

Read More »

உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இதன் பிறகு அந்த வைரஸ் பல மாற்றங்களை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கு தகுந்தமாதிரி அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புதிய ...

Read More »

உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது

கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கம்போடியாவில் இதுவரை ...

Read More »