பிரிட்டன் இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் மறைவுக்கு இளவரசர் ஹாரி மறும் அவரது மனைவி மெக்கன் மார்கெல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப், ராணி எலிசபெத்தைத் திருமணம் செய்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். இளவரசர் பிலிப் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத்துக்கு உற்ற துணையாக இருந்து வந்தார்..
இந்த நிலையில் தனது 99 வயதான இளவரசர் பிலிப்ஸின் மரணமடைந்ததாக இங்கிலாந்து அரசு குடும்பம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த பிரிட்டனும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்கெலும் இளவரசர் பிலிப்பின் மரணத்துக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹாரி – மெக்கன் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ உங்கள் பணிக்கு மிக்க நன்றி, நீங்கள் என்று நினைவில் கொள்ளப்படூவீர்” என்று தெரிவித்துள்ளனர்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				