Tag Archives: ஆசிரியர்தெரிவு

முதலை கண்ணீர் வடிக்கின்றார் மஹிந்த!

“இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணியினை  சீனாவிற்கு தரைவார்த்து கொடுத்தவர்கள் இன்று இராணுவத்தினரது உரிமை தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்கின்றமை வேடிக்கையாகவே காணப்படுகின்றது” என தெரிவித்த பிரதியமைச்சர் அஜித் மாணப்பெரும தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான  சிறிகொதாவில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேசத்திற்கு  இராணுவத்தை காட்டிக் கொடுத்த பயனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு  விரட்டுவோம் என்று  நேற்று முன்தினம்  மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் . 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் ...

Read More »

ஜிமெயிலில் டிராப் பாக்ஸ்!

இணையக் கோப்புச் சேமிப்பு சேவையான டிராப் பாக்ஸ், கூகுளின் ஜிமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜிமெயில் பயனாளிகள், கோப்புச் சேமிப்புக்காக டிராப் பாக்ஸ் சேவையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், இனிமேல் தங்கள் மெயிலில் இருந்தே டிராப் பாக்ஸ் கோப்புகளை அணுகலாம். கிளவுட் முறையில் கோப்புகளைச் சேமித்து, எந்த இடத்தில் இருந்தும் அணுக வழி வகுக்கும் சேவைகளில் முன்னணியில் விளங்குகிறது டிராப் பாக்ஸ். மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகளுடன் தனது சேவையை ஒருங்கிணைப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது டிராப் பாக்ஸ். இந்த வரிசையில், தற்போது கூகுள் ...

Read More »

வரலாற்று சாதனை படைத்த அப்பிள்!

அப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து அப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. அப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ...

Read More »

சிறிலங்காவிற்கு சீனா கைகொடுக்கும்!

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் சிறிலங்காவின்  எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங்க்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கால் ஆரம்பிக்கப்பட்ட பட்டையும் பாதையும்” ​வேலைத்திட்டத்தின் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன பிரதியமைச்சர் யேஜு, அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (02) சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

“நல்லாட்சி்” அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது’! -மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை இராணுவத்தினருக்கு தற்போதைய அரசாங்கம் கையளித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிதல் மற்றும் மனித கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இராணுவத்தினர் செய்துவருவது ஆச்சரியமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்!

“நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற நாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற” மேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்கிட்டா, 21 வயதாகும் அரோஹி பண்டிட் ஆகிய இரண்டு இளம்பெண்களும் விமானத்தில் உலகை வலம்வரும் தங்களது பயணத்தை பஞ்சாபிலுள்ள பாட்டியாலா விமான தளத்திலிருந்து கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர். பொதுவாக தரையிலிருந்து வானத்தை பார்க்கும்போது மக்கள் விண்மீன் கூட்டத்தை பற்றி நினைப்பார்கள். ஆனால், இந்த இரண்டு இளம்பெண்களும் தலைகீழாக அதாவது, வானத்திலிருந்து பூமியை அதுவும் 100 நாட்களில் பார்ப்பதற்கு புறப்பட்டுள்ளார்கள். ...

Read More »

கூகுள் நியூஸின் புதிய வடிவம்!

கூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய ...

Read More »

அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியாது!

அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு, உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது. பொது எதிரணியினரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதன் காரணமாகவே பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் வந்திருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது ...

Read More »

‘60 வயது மாநிறம்’

விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படத்துக்கு ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் தற்போது விக்ரம்பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு ...

Read More »