Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராட்டம்!

கொரோனா பதற்றத்திற்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி அந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்த இப்போராட்டத்தில் 120 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர். மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 70 அகதிகள் இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலை தடுப்பிற்கான மாற்று இடமாக ஆஸ்திரேலிய அரசு பயன்படுத்தி வரும் நிலையில், போதுமான மருத்துவ சிகிச்சையும் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை ...

Read More »

எதேச்சதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கிறது! – ஹரிசன்

ஆட்சியைகைப்பற்றி இந்த குறுகிய காலத்திற்குள் மக்களுக்கு தற்போது போன்று நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கமொன்றை இதுவரையில் அறிந்ததில்லை. ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு , எதேச்ச அதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹெரின்சன், அரசாங்கம் சடங்களுக்கு மேல் ஏறிநின்றாவது தேர்தலை நடத்தவே முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ;இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அட்சியை கைப்பற்றியதிலிருந்து இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டு மக்களுக்கு இது போன்ற நெருக்கடியை ...

Read More »

கொழும்பு நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

Read More »

2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்!

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்திகதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் மாவோ யின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவோ ஜென்ஜிங் அவனை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் எப்படியானவர்கள் நுழைய முடியும்?

கொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணத்தடையால், தற்காலிக விசா பெற்ற பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பான்சர் பணி விசாக்கள் மூலம் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு Fletcher என்பவரின் குடும்பம் சென்ற நிலையில், பள்ளித் தேர்வுகளை முடிப்பதற்காக அவரது 16வயது மூத்த மகன் டெயிலர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்திருக்கிறார். பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள பெற்றோருடன் ...

Read More »

முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள்

சிறிலங்கா  அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி விழா உரை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் ...

Read More »

விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் அரச பயங்கரவாதமே!

இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அவை பயங்கரவாதப் போராட்டம் அல்ல, உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 11 ஆவது போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி கோத்தாபய ;ராஜபக்ஷ ஆற்றிய உரை தொடர்பில் ஊடங்களுக்குக் கருத்துக்களை பகிரும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போராட்டம் தொடங்குவதற்கு மூல ...

Read More »

உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுவதை நிரூபித்து காட்டாவிட்டால் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என கூறி உள்ளது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் திகதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் ...

Read More »

11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டாகுரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகூடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘எல்பிரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்த படிமத்தை ஆராய்ந்தபோது ...

Read More »

தமிழர்களுக்கு மிரட்ட விடுத்த பிரியங்க பெர்ணாண்டோவிற்கும் பதவி உயர்வு!

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவேளை கொலைமிரட்டல் சமிக்ஞைவிடுத்ததன் காரணமாக சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேஜர் ஜெனரல் தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பிரியங்க பெர்ணாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதை இராணுவ ஊடக பிரிவு உறுதி செய்துள்ளது. பிரியங்க பெர்ணான்டோ உட்பட ஐவர் மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.2018 ம் ஆண்டு பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் சுதந்திர கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பிரியங்க பெர்ணான்டோ மரண அச்சுறுத்தல் சமிக்ஞை செய்தமை காணொளி மூலம் ...

Read More »