கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal