Tag Archives: ஆசிரியர்தெரிவு

தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் அவருக்குப் பதிலாக நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் இளைஞரணி தலைவர் ஜீவன் தொண்டமானை களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரப் பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இம்முறை இ.தொ.கா போட்டியிடுகிற நிலையில், இ.தொ.காவின் இத்தீர்மானத்தை அக்கூட்டணியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று அறிவித்துள்ளது.

Read More »

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வயது (55) சற்று முன்னர் காலமானார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் காலமானார் என, தலங்கம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!

நான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இவைகள் பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன். முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று நிகழ்த்தினார் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதோடு இவற்றை தடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மகாவலி எல் வலயத்தின் ஊடாக எப்படி முல்லைத்தீவில் உள்ள காணிகள் அதனுடன் ...

Read More »

வீதியில் மயங்கி விழுந்தவர் மரணம்!

திருகோணமலை தலைமையக காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (26) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது-68) என தலைமையககாவல் துறையினர்  தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

Read More »

பூஜித்தவின் மனு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பை மீறியுள்ளாரென தீர்ப்பளித்து, தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, யசன்ன கோதாகொட ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More »

இந்திய-அமெரிக்க விஞ்ஞானிக்கு நியூயார்க்கில் மதிப்பு மிக்க ‘ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர்’ விருது

நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டாக்டர் ஜோஷியின் மின்னணு தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு உகந்த செயல்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்காகவும் ஜோஷிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 250 காப்புரிமைக்குட்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் ஜோஷி. இதனால் நியூயார்க்கின் மதிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டக் கூட்டமைப்பு இவருக்கு மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வழங்கி கவுரவித்தது. டாக்டர் ...

Read More »

நிலநடுக்கத்திலும் அசராமல் நேர்காணலை முடித்த நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்டபோதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பாராளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் அதிர்ந்தன. எனினும் ஜெசிந்தா பதற்றப்படாமல் தொடர்ந்து தனது நேர்காணலை தொடர்ந்தார். தனக்கு பின்னால் இருக்கும் பொருட்கள் அசைவதைப் பார்த்தும் அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர், ‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை ...

Read More »

யாழில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பலை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல் துறையினரிடம்  தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று ( 25) திங்கட்கிழமை மாலை மூவரும் கைது செய்யப்பட்டடதாக பொலிஸார் கூறினர். சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுன்னாகம் காவல் துறை  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...

Read More »

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த பதவியில் உள்ள திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார் என்றும், தேர்தலின் பின்னர் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அண்மையில் திருமதி சாள்ஸ் தனக்கு மூன்று மாத ஓய்வு வேண்டும் என்று கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

கிழக்கில் தொல்லியல் ஆய்வு… சிங்கள பௌத்த நாடாக மாற்றத் திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். அவர் மட்டக்களப்பிலுள்ள அவரது வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு ...

Read More »