திருகோணமலை தலைமையக காவல் துறை பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (26) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது-68) என தலைமையககாவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.
Eelamurasu Australia Online News Portal