முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பை மீறியுள்ளாரென தீர்ப்பளித்து, தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, யசன்ன கோதாகொட ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Eelamurasu Australia Online News Portal