Tag Archives: ஆசிரியர்தெரிவு

பொருளாதார தடைக்கு ஒருநாள் முன்னதாக 5 புதிய விமானங்களை வாங்கிய ஈரான்!

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக 5 புதிய விமாங்களை ஈரான் வாங்கியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏடிஆர் உடன் 72-600 ...

Read More »

வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து அதனை போர்ப் பாதிப்பு குழப்பியுள்ளது!

கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பிவிட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். ஆனால், வடமாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (05) நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர், “கல்வி தான் எமது ஒரேயொரு ...

Read More »

சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் ...

Read More »

ஸ்கைப்பில் புதிய வசதி!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது. உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோரம் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். “மக்கள் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்லவும் அமைதியாக இருக்கவும் பதற்றம் வேண்டாம்” என்று புவியியல், வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த்விகோரிட்டா கர்ணாவடி உள்ளூர் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். லோம்போக் தீவின் முக்கிய நகரமான மடாரம்மில் கடுமையான அதிர்வை ...

Read More »

அரசியல் தீர்வை காரணம் காட்டி மக்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது!

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் தீர்வு விடயத்திற்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.  எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் ...

Read More »

புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு நிதி உதவி!

மன்னார் மனித புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு காணாமல் போனோர் அலுவலகம் நிதிவழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்தார். மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு நீதியமைச்சின் ஊடாக நிதி வழங்கப்படுகின்ற போதிலும் தொடர்ச்சியான மீட்பு பணிகளுக்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த மீட்பு பணிகள் கைவிடப்படாது தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம் அதற்கான நிதியை மாதாந்தம் வழங்கும் ...

Read More »

இயக்குநர் கனவை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராய்!

தன்னுடைய இயக்குநர் கனவை வெளிப்படையாக அறிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். ‘ஏ தில் ஹாய் முஷ்கில்’ படத்துக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் படம் ‘ஃபன்னி கான்’. அதுல் மஞ்ச்ரேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அனில் கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மியூஸிக்கல் காமெடிப் படமான இது, இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராய், இயக்குநராகும் தன் கனவை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னுடைய இந்தக் கனவுக்கு மிகப்பெரிய ஊக்கம் கொடுத்து ...

Read More »

சிங்கப்பூர் ஒப்பந்தத்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்காது!

சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் மற்றும் அதனூடாக பெருமளவு வருமானம் இருக்காது என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். நாணயச்சபை மீளாய்வுக் கூட்டத்தொடரின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று மத்திய வங்கியில் நடைபெற்றது. அச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இவ்வொப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் மற்றும் அதன் மூலம் பெருமளவான ஏற்றுமதி வருமானம் என்பனவற்றை இலங்கை எதிர்பார்க்க ...

Read More »

எனது மகன் மிகவும் நல்லவன்! – பின்லேடன் தாயார்

எனது மகன் மிகவும் நல்லவன், மூளை சலவையால் பயங்கரவாதி ஆனான் என்று பின்லேடன் தாயார் அலியா கூறியுள்ளார். அல்கொய்தா பயங்கரவாதி இயக்கத்தின் தலைவராக பின்லேடன் இருந்தார். உலக நாடுகளை அச்சுறுத்திய அவர் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடன் தாயார் அலியா தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘எனது மகன் (பின்லேடன்) மிகவும் நல்லவன். ...

Read More »