Tag Archives: ஆசிரியர்தெரிவு

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் மைத்திரி!

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி  சிறிசேன என  அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம் புரட்டிப்போடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறிசேன தற்போது யுத்த குற்றம்,காணாமல்போதல் போன்றவற்றிற்கு காரணமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார். அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ள சமந்தா பவர் இலங்கையர்களும் இந்த  விவகாரத்தை கையிலெடுக்கவேண்டும், பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் ...

Read More »

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் என்ன?

70 ஆண்டுகாலமாக நீடிக்கும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உங்களிடத்தில் உள்ள உத்தரவாதம் என்ன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை மஹிந்த ராஜபக்ஷ ஆக்கபூர்வமானதாக பார்க்காது தவறவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.   கடந்த காலத்தினை மறந்து தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம், எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதென்றால் தங்களிடத்தில் உள்ள திட்டம் ...

Read More »

இந்தோனேசியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது- 188 பயணிகள் பலி!

இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர். அவர்களில் 178 பேர் ...

Read More »

அரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக ஹெகலிய, சமரசிங்க!

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே தேசிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்துக்கது.

Read More »

டெலோவின் முக்கியஸ்தருக்கு ஆவா குழு எச்சரிக்கை!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை காவல் துறை நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் (28) இரவு 07.30 மணியளவில் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தடைசெய்யப்பட்ட கழகங்களை இணைத்து செயற்படாவிட்டால் உன் மீது வாள்வீச்சு நடாத்தப்படும் ...

Read More »

என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சேகா!-மைத்திரி

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனினும் அரசியல் தலையீடுகள் ...

Read More »

பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மறைந்த மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, இந்த விருதுக்கு மேலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தான்சானியா நாட்டை சேர்ந்த ...

Read More »

புதிய அவதாரம் எடுக்கும் லைலா!

தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த லைலா, விரைவில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பேட்டியளித்திருக்கிறார். கள்ளழகர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத்தனமான முகத்தினால் வசீகரித்தார். திருமணம் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் அளித்திருக்கும் பேட்டி வருமாறு:- திருமணத்திற்குப் பிறகு ஏன் நடிக்க வில்லை? எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ...

Read More »

அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு அங்கு கடின வாழ்வு

நவுறு மற்றும் மனுஸ் தடுப்பில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகள் அங்கு கடின வாழ்வை எதிர்நோக்கியிருப்பதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார். வேலையை தேடுவது போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதாக நவுறுவிலுள்ள தமது நண்பர்களுக்கு கூறியதாக என்று பீட்டர் டட்டன் மேலும் கூறியுள்ளார். நவுறு தீவிலிருந்து மூன்றாவது நாடொன்றுக்கு சென்று அங்கு குடிமயர்வதற்கு சம்மதித்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை பல தொகுதிகளாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு படகு ...

Read More »

ஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்!

சிறிலங்காவின்  பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Read More »