வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறது. முதற்கட்டமாக அணு ஆயுத சோதனை மையத்தை அழித்தது. அத்துடன் அணு ஆயுத திட்டங்களையும் கைவிட தயாராக உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது தங்களிடம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. தனது மகனை பாடசாலைக்கென அழைத்துச்சென்றிருந்த குறித்த முன்னணி இணைய ஊடகவியலாளரை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் சட்டநாதர் வீதி சந்தியில் கைத்துப்பாக்கியுடன் வழிமறித்த இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்களுள் ஒருவர் வல்வெட்டித்துறை இராணுவ முகாமை சேர்ந்த புலனாய்வாளர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். மற்றொரு நபர் உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவரே அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ...
Read More »இன்று திருமலையில் காணாமல் போனோருக்கான சந்திப்பு!
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக ...
Read More »பெண் பாடகர்களில் ரொம்பவும் தனித்துவமான குரல் ஜென்ஸியுடையது!
இந்தியா முழுக்க இந்தித் திரைப்படப் பாடல்கள் கோலோச்சிய காலகட்டத்தில், அனைவரையும் நாட்டின் தென் திசைநோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர், இசைஞானி இளையராஜா. தமிழ் மண் மணத்தை உலகம் முழுக்க இசையாகக் கொண்டுசேர்த்த இசைக் கலைஞர். காதல், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை, சோகம், காதல் தோல்வி என அனைத்துவித உணர்வுகளையும் இளையராஜாவின் கரம்பிடித்தே கடக்கின்றனர் இசை ரசிகர்கள். இன்றைக்கும் நெடுந்தொலைவு பயணத்துக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் மறக்காமல் எடுத்துக்கொள்வது, இவரின் இசைப் பாடல்களின் தொகுப்பையே. அந்தத் தொகுப்பில், ஜென்ஸி பாடிய ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பிடித்துவிடும். அப்போதைய பெண் பாடகர்களில் ...
Read More »அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட ...
Read More »உத்ராவும் உன்னி கிருஷ்ணனும்!
மழை மட்டுமா அழகு! சுடும் வெயில்கூட ஒரு அழகு!’ நமது ரசனையின் திசையைச் சற்றே மாற்றிப் பார்க்கச்செய்யும், `சைவம்’ திரைப்படப் பாடலின் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார். பலரும் திரும்ப திரும்பக் கேட்டு லயிக்கும் பாடல். குழந்தைமைத் ததும்ப ததும்ப தன் இனிமையான குரலில் பாடி, வரிகளை நம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல். மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் உன்னிகிருஷ்ணன். `காதலன்’ படத்தில் தொடங்கியது அவரது திரையிசைப் பயணம். பின்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் அன்பு மகள்தான் உத்ரா. ...
Read More »டிரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் ...
Read More »சபைக்கு தவராசாவிற்குரிய பணத்தை கொண்டு வந்த கிழக்கு மாணவர்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடைய ணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறிய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை ...
Read More »காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே!
காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல. தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை ...
Read More »புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி!
கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. ...
Read More »