சிரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு நிகழ்த்தி பொதுமக்களை கொன்று குவித்த கொடூர செயலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்கா காவல் துறையினர் என்னை சித்திரவதை செய்தனர்!
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் தன்னை காவல் துறையினர் சித்திர வதைக்கு உள்ளாக்கினர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கின் சாட்சியாக முறைப்பாட்டைப் பதிவு செய்த மற்றும் சந்தேகநபர்களைக் கைது செய்ய உதவிய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அதன்பின்னர் சாட்சியத்தில் குறுக்கு விசாரணைகள் ...
Read More »அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு!
அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை ...
Read More »சான்ஸ் ஃபார்காட்டிகா: நினைவாற்றலைப் பெருக்கும் எழுத்துரு முயற்சி!
வாசகர்கள் படித்ததை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சாதாரண ‘ஏரியல்’ எழுத்துருவில் 50% நினைவுவைத்துக்கொள்ள முடியும் என்றால், புதிய எழுத்துருவான ‘சான்ஸ் ஃபார்காட்டிகாகா’வில் 57% நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று ...
Read More »“துரையப்பா மைதான பெயரை மாற்றுங்கள்” -பிரேரணைக்கு தயாராகிறது ரெலோ
யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரினை மாற்றுவதற்கு ரெலோ எடுத்த முயற்சி சர்ச்சையாக வெடித்துள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரான துரையப்பா தமிழினத் துரோகி என அடையாளப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதால் யாழ்ப்பாணம் மாநகரசபையின் கட்டுப்பாட்டிலுல் துரையப்பாவின் பெயிரில் அமைந்த துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான முழுமுயற்சியில் யாழ் மாநகர துணை முதல்வரான ரெலோ அமைப்பினைச் சேர்ந்த துரைராசா ஈசன் ஈடுபட்டுவருகின்றார். இதன்பொருட்டு யாழ் மாநகரசபையின் 21 ஆம் திகதிய அமர்வில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிப்பதற்கு தயாராகிவரும் அவர் இதற்கு ஆதரவு ...
Read More »பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை!
பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த ...
Read More »டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்குதல்!
அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 41 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Belongil கடற்கரையில் அலையாடலில் ஈடுபட்டிருந்த போது அவருடைய பலகையைச் சுறா தாக்கியது. உடனிருந்த மற்றொரு நண்பரின் உதவியோடு அவர் சுறாவிடமிருந்து தப்பித்தார். எந்த மாதிரியான சுறா தாக்கியது என்பதை பொலிஸார் ஆராய்ந்து வருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டு கடற்கரைகளும் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டன.
Read More »இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது!
சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ராணுவ வீரர்கள் எந்தக் ...
Read More »வட மாகாணத்தில் 275 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலையில்!
50 க்கும் குறைவான மாணவர்கள் கற்கும் ஆயிரத்து 486 அரச பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10 ஆயிரத்து 194 அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் 9 ஆயிரத்து 841 பாடசாலைகள் மாகாணசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. 353 பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்ற அடிப்படையில் கொழும்பு அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. மாகாண சபைகளின் கீழ் 4 ஆயிரத்து 59 மூன்றாந்தர வகைப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவ்வகையான பாடசாலைகளில் ஆயிரத்து 486 பாடசாலைகள் ...
Read More »