எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 20 பில்லியன் ரூபா தாண்டக்கூடும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தேர்தலில் 6 ஆயிரம் வேட்பாளர்கள் என்றும் தேர்தல்கள் செலவீனங்களை குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
குற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்!
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அத்துடன் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார். தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே குறித்த சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ...
Read More »தமிழர்களின் மனங்களை வெல்ல விசேட அமைச்சு விரைவில்…..!
ஜனாதிபதியும் இந்த விடயத்தை உணர்ந்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவர்களின் அபிமானத்தை காப்பாற்றுவது அவசியம். கூட்டமைப்புடன் பேசுவதில் அர்த்தமில்லை. நாட்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும் செயற்பட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்காக தனியான ஒரு அமைச்சை உருவாக்கவேணடும். தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி மக்களை இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அந்த பொறுப்பை ...
Read More »டி20 உலகக்கோப்பைக்கு 360 டிகிரி-யை அழைத்து வர தென்ஆப்பிரிக்கா முயற்சி!
ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது. தென்ஆப்பிரிக்கா ...
Read More »உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு!
2019-க்கான உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம் பிடித்தார். 69-வது உலக அழகி போட்டி (மிஸ்வேல்டு) லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் ...
Read More »வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது!
நாட்டின் எந்தவொரு வளத்தையும் வெளிநாட்டவர்கள் உரிமைகொள்வதற்கு இடமளிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். வெயாங்கொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை கட்டியெழுப்புவதே தனது முதலாவது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும்!
வடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஆளுநராக நியமிக்கப்படுபவர் தமிழ் மக்களின் வாழ்வியலை பூரணமாக புரிந்து கொண்டவரும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் போதிய அனுபவம் உள்ளவராகவும் உள்ள வடமாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும். வடமாகாணத்திற்கு ஒரு ஆளுனரை நியமிக்காமல் விடுவது சிங்கள தேசத்தை சேர்ந்த ...
Read More »உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கான விஜயத்தின் பின்னர் இந்த செய்தியை பதிவு செய்துள்ள அவர் வியட்நாமில் நான் சந்தித்த யுவதிகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்,என குறிப்பிட்டுள்ள ...
Read More »அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கை!
இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவா விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணையை மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பாக கருத்து வெ ...
Read More »யாழ். விமான நிலையத்திற்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பயணிகளுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக ...
Read More »