கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் அறிக்கை: பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது. இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி காவல் துறைமா அதிபர்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மதிப்பீட்டு கூட்டமொன்றை நடத்துவது வழமை என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீட்டு அறிக்கையொன்றை ...
Read More »விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன்
தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடா நிதியை துஸ்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு கனடாவிலிருந்து நிதி ஏதும் தரப்படவில்லையென மறுதலித்துள்ளதுடன் கட்சியிலிருந்து விமலேஸ்வரியை நீக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். அரச தரப்பிலிருந்து கூட்டமைப்பிற்குள் ஊடுருவல் நடந்துள்ளதாகவும் பெருமளவு பணம் அள்ளி வீசப்படுவதாகவும் அப்பின்னணியிலேயே விமலேஸ்வரி தன் மீது சேறுபூசுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவருடன் இணைந்து செயற்பட்டவரே விமலேஸ்வரி என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவரை தூண்டிவிட்டேன ...
Read More »இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில்…..
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான சர்வதேச யுத்த குற்ற விசாரணையை, அரசியல் தீர்வு வரப்போகின்றது என்ற கானல் நீரைக் காட்டி மழுங்கடித்தவர்கள் நாம் அல்லர் எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன், வட மாகாண சபையில் நாம் இயற்றிய இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் அறிவித்திருக்கின்றார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புக் கூட்டம் மல்லாகம், குழமங்காலில் நேற்றிரவு நடைபெற்ற போது, அதில் நிகழ்த்திய பிரதான உரையிலேயே விக்கினேஸ்வரன் இதனைத் ...
Read More »வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய முகநூல் நடவடிக்கை – மார்க் ஜூகர்பெர்க் உறுதி
முகநூலில் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் களையப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளமான முகநூலில் இனவெறி, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் முகநூல் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முகநூலில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. இதனால் முகநூல் நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்த ...
Read More »ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைது!
கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் என இந்தோனேசிய படகை விலைப்பேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற ...
Read More »உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து மைத்திரி எத்தனை மில்லியன் பெற்றார்?
உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். உலக முஸ்லீம் லீக்கின் செயலாளர் நாயகம் கலந்துகொண்ட நிகழ்வில் கடந்த வருடம் தான் கலந்துகொண்டதாக சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிவழங்குவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை முஸ்லீம் அமைப்பு வழங்கும் என அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த நிதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி உலக முஸ்லீம் லீக் இதனை தெளிவுபடுத்தியுள்ளது ...
Read More »யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யார்?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி – முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காகப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி கூட்டப்படவுள்ளது. துணைவேந்தர் தெரிவுக்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையின் படி கோரப்பட்ட தற்கமைய ...
Read More »117 நாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் காலதாமதம் ஏற்படும்
கொவிட் -19 தாக்கத்தை அடுத்து 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும், எனினும் சற்று காலதாமதமாகும் என்கிறது அரசாங்கம். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று(25) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பதிரன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள ...
Read More »நியூசிலாந்திலிருந்து 88 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்
கொரோனா நெருக்கடி காரணமாக நியூசிலாந்தில் சிக்கித்தவித்த 88 இலங்கையர்கள் நேற்று(25) பாதுகாப்பாக நாடு திரும்பினர். நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த குறித்த பயணிகள் சில்க் ;எயாரின் விசேட விமானம் மூலம் நேற்று மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
Read More »