உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து மைத்திரி எத்தனை மில்லியன் பெற்றார்?

உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

உலக முஸ்லீம் லீக்கின் செயலாளர் நாயகம் கலந்துகொண்ட நிகழ்வில் கடந்த வருடம் தான் கலந்துகொண்டதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிவழங்குவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை முஸ்லீம் அமைப்பு வழங்கும் என அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த நிதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி உலக முஸ்லீம் லீக் இதனை தெளிவுபடுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டு;ள்ளார்.

உலக முஸ்லீம் லீக் சில தகவல்களை கோரியிருந்தது இலங்கை அதற்கு பதிலளிக்கவில்லை இதன்காரணமாக அந்த பணம் கிடைக்கவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.