முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் ; நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து& பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது . முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ஆஸ்திரேலியா திட்டம்
மற்ற நாடுகளை விட எல்லையை மூடுவதில் சற்றும் தயங்காத ஆஸ்திரேலியா, வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. தற்போது உருமாறிய கொரோனா 2-வது அலை, 3-வது அலை ...
Read More »மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு
வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத் தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போரில் பலியானோரை நினைவுகூரும் தினம் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ள குறித்த அறிக்கையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கி. நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- “மே ...
Read More »யாழில் 35 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொவிட்-19 தொற்று
யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...
Read More »இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு
பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...
Read More »சட்டத்தை மீறி திருமண வைபவத்தை நடத்திய மணமக்கள்
சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்திய திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 9 ஆம் திகதி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு ...
Read More »இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பல்வேறு கட்டுப்பாடுகள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன அறிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும். முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.
Read More »நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து: நான்கு பேர் காயம்!
நியூஸிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர். தெற்கு தீவின் மத்திய டுனெடினில் உள்ள கவுண்டவுன் பல்பொருள் அங்காடியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘தாக்குதலின் பின்னணியில் உள்ள உந்துதல் தெளிவாக இல்லை, ஆனால் இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத ...
Read More »சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது!
இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய அரசாங்கம் அந்த வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் கோவிட் 19 வைரஸ் என மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் உண்மையில் தற்போதே இலங்கை கோவிட் வைரஸ் தொற்றை கூடுதலாக எதிர்நோக்கி ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவார்களாம்!
கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் கட்டுப்பாட்டுக்காக ...
Read More »