சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும்சிறிலங்காவில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 சிறிலங்கா இராணுவத்தினர் பங்குபற்றினர். இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று சிறிலங்கா இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி!
கடந்த 48 மணித்தியாலத்தில் இரண்டாவது முறையாக வடக்கு அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி தாக்கியுள்ளது. வட மேற்கு கரையோரப்பகுதியான பில்பரா பகுதியில் மையம் கொண்டிருந்த வெரோனிகா புயல் இன்று அதிகாலை மீண்டும் 95 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பில்பராவில் நேற்று முன்தினம் சுமார் 180 மில்லிமீற்றர் ...
Read More »52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள்!
சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல ...
Read More »மின்தடை பற்றிய முக்கிய அறிவிப்பு !
நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் இரு கட்டங்களாக நான்கு மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் முதல் கட்டமாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்கள் பிரதேச அடிப்படையில் மின்சார தடை அமுல் செய்யப்படவுள்ளது. அத்துடன் அதே போல் நாளாந்தம் இரண்டாம் கட்டமாக ...
Read More »இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம் தெரிவித்தார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் மேலும் தெரிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது சிறுவனொருவன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...
Read More »குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது – பெனாசிர் மகன்
இந்தியாவின் குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய ...
Read More »அவுஸ்ரேலிய முப்படைகள் கப்பல்கள் சிறிலங்காவில்!
அவுஸ்ரேலியாவின் முப்படைகள் , கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இலங்கை சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அவுஸ்ரேலிய முப்படைகள் சிறிலங்கா சென்றுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் சிறிலங்கா முப்படைகள் ஒன்றிணைந்து அனர்த்த முகாமைத்துவம். கடற்பிராந்திய தந்திரோபாயம் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். கன்பரா மற்றும் எச்.எம்.ஏ.எஸ். நியூகேஸ்லி ஆகிய கப்பல்கள் நேற்றைய ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த பாதிரியார்……!
அவுஸ்திரேலியாவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் ட்ரான் (49). இவர் பெர்த் நகரத்தில் உள்ள பல பள்ளிகளில் பணிபுரிந்திருக்கிறார். அர்மாடாலின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்தவர் சமீபத்தில் தான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 13 வயதடைந்திருக்கும் ஒரு சிறுமியை பல வருடங்கள் அவர் பாலியல் ...
Read More »இலங்கை கடற்பரப்பில் வைத்து 9 ஈரானியர்கள் கைது!
மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காவல் துறை விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார். காவல் துறை விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் ...
Read More »ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல் – இந்துஜா குடும்பத்துக்கு முதலிடம்!
25.2 கோடி பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் பிரிட்டனில் வாழும் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்துஜா குடும்பம் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டன் நகரில் நடைபெற்ற ‘ஏசியன் பிசினஸ் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் பிரிட்டனில் வாழும் ஆசியா கண்டத்தின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை பிரிட்டன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் தூதர் ருச்சி கனஷியாம் வெளியிட்டார். 7 புதிய வரவுகள் உள்பட 101 பெரும் செல்வந்தர்களின் பெயர்களை கொண்ட இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட சுமார் 300 கோடி பவுண்டுகள் அதிக ...
Read More »