இலங்கையிலுள்ள சிறார்களுக்கு சின்னம்மை நோய்க்கு நிகரான ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாய், கை மற்றும் கால்களில், நீர் தன்மையான கொப்புளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகள் என்பன ஏற்படும் என, அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், காய்ச்சல் ஏற்பட்ட சிறார்களை பாடசாலைக்கோ அல்லது முன்பள்ளிகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்றும், சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஷாபி விவகாரம் : முறைப்பாடளித்த தாய்மாருக்கு பரிசோதனை!
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்களை விசாரணைகளை முன்னெடுக்கும் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
Read More »ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்!
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு ...
Read More »ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு!
துருக்கி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்புள்ளது. இந்த கொலை தொடர்பாக ஐ.நா. சபை சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது. இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ...
Read More »கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி
ஆஸ்திரேலியாவில் கடல் அலையைப் போல மோதிய மேகக்கூட்டத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் தேதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார். வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் ...
Read More »கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை துறைமுக நகர்!
கொழும்பு துறைமுக நகரை போன்று கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரையில் துறைமுக நகர் ஒன்றினை சர்வதேச முதலீட்டில் உருவாக்கவுள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நா்டாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், கடல் சூழல் பாதிப்பு என்ற விடயங்களை கூறி சிலர் மக்களை அச்சுறுத்தி குழப்பினர்.எனினும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கடல் பரப்பில் இன்று 700 ஏக்கர் ...
Read More »முஸ்லீம்கள் தொடர்பான பௌத்தமதகுருவின் ஆபத்தான கருத்து!
முஸ்லீம்களை கல்லால் அடிக்கவேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தன தேரர்வேண்டுகோள் விடுத்திருப்பதை கடுமையாக சாடியுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர இது பௌத்தத்தை தலிபான்மயப்படுத்தும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மற்றொரு மனிதனை கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை எந்த பௌத்தராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மதகுருமார்கள் அந்த வேண்டுகோளை விடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பு சமாதானம் ஆகிய எங்கள் உயர்தத்துவத்தை தலிபான்மயப்படுத்தும் முயற்சிகளிற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முஸ்லீம் கடைகளிற்கு செல்லாதீர்கள் அவர்கள் வழங்கும் ...
Read More »இந்து சம்மேளனத்தின் தலைவர் நான்காம் மாடியில் ….!
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தார். இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு காணொளி ஆதாரங்களை வெளியிட்டார். பேட்டியில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினால் கோரப்பட்டதற்கிணங்க, அருண்காந்த் நேற்று திங்கட்கிழமை ஆஜராகி சாட்சியம் வழங்கினார். அதன்படி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, காணொளி ...
Read More »பால் மா கலப்படம்: அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட சில பால் வகைகளில் சுத்திகரிப்பு திரவம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 8 வகையான பால் வகைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் பால் கொள்முதல் செய்யும்போது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள Coles, Woolworths, IGA உள்ளிட்ட பிரபல அங்காடிகள் மற்றும் எனைய இடங்களில் விற்பனையாகும் பால் வகைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு திரவம் கலந்துள்ளதாக நம்பப்படும் இந்தப்பால் மஞ்சள் நிறமாக தெரியும் அல்லது ...
Read More »அவுஸ்திரேலியாவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோய்!
இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக ...
Read More »