இலங்கையிலுள்ள சிறார்களுக்கு சின்னம்மை நோய்க்கு நிகரான ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாய், கை மற்றும் கால்களில், நீர் தன்மையான கொப்புளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகள் என்பன ஏற்படும் என, அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், காய்ச்சல் ஏற்பட்ட சிறார்களை பாடசாலைக்கோ அல்லது முன்பள்ளிகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்றும், சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும், அந்த அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.