காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், உடனடியாக இந்தியாவுடனான தூதரக உறவின் தரத்தை குறைத்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று, உலக நாடுகளிடம் ஆதரவு கோரியது. ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா (வயது 43). தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்தப் பெண் கலைஞர் ரகசியமாக வைத்துள்ளார். ‘விக்’ என்னும் செயற்கை முடி அலங்காரத்துடன், தலைக்கவசம் அணிந்து தன் முகத்தை இவர் மறைத்து வந்தாலும், இவரது பாடல்களை ரசிப்பதற்கென்று அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இவர் ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய ...
Read More »லசந்த விக்ரமதுங்க படுகொலை! -முன்னாள் ரி.ஐ.டி.பிரதானிகள் இருவருக்கு சிக்கல்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சிகள் மற்றும் விடயங்களை குறித்த கொலை தொடர்பில் முன்னர் விசாரணை செய்த ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் இருவர் மறைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரி.ஐ.டி.யின் முன்னாள் பிரதானி பிரதி காவல் துறை மா அதிபர் சந்ரா வாகிஸ்ட மற்றும் அப்போது அந்த புலனாய்வுப் பிரிவின் உதவி காவல் துறை அத்தியட்சராக இருந்த பிரசன்ன அல்விஸ் ஆகியோர் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளதாக தற்போது லசந்த விக்ரமதுங்க விவகாரத்தை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் ...
Read More »நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் ...
Read More »காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!
காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர். இதனால் மாநிலம் முழுவதும் கட்டுமானப்பணிகள் முடங்கி கிடக்கிறது. புல்வாமாவில் உள்ள கன்மோ தொழிற்பேட்டையில் மொத்தமுள்ள 200 யூனிட்டுகளும் ...
Read More »5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த இந்திய வம்சாவளி டாக்ஸி ஓட்டுநர்!
ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் வந்தவரை இடித்து கீழே தள்ளிய வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தானதை அடுத்து 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குர்பேஜ் சிங் (29), 2017 டிசம்பரில் பிளின்டர்ஸ் தெருவில் இருந்து கண்காட்சி தெருவுக்கு திரும்பும்போது ஒரு சிக்னலில் சைக்கிள் வந்தரை இடித்து கீழே தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய சட்டப்படி இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களுக்கு 5 ஆண்டு சிறைத்தன்டனை அனுபவிக்க வேண்டிவரும். குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் ...
Read More »யாழ்.ஊடகவியலாளர் சோபிதனிடம் காவல் துறை விசாரணை!
வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு காவல் துறை தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமுகமளிக்குமாறு காவல் துறை தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை ...
Read More »இராக்கில் அரசு எதிரான வன்முறை: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு; 1500 பேர் காயம்!
இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1500 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறை காரணமாக இராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரசுக்கு ...
Read More »மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்!
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் டெல்லியில் ‘Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்ற இருக்கிறார் ஸ்காட் மோரிசன். இந்த நிகழ்வு அடுத்தம் வருடம் ஜனவரி மாதம் 14 தேதி முதல் ஜனவரி ...
Read More »அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்த நபர்!
வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். டானியல் கிங் என்ற நபரையே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இரவு 8.45 மணியளவில் குறிப்பிட்ட நபர் மரயோங் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கர்ப்பிணிப்பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் சென்மேரிஸ் காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் ...
Read More »