சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன…, கலைமகள் கைபொருளே…, இரண்டு மனம் வேண்டும்…, ஏன் ஏன் ஏன்… ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்காவில் 25 வருடம் காவலாளியாக பணிபுரிந்தேன் – அரங்கேற்றம் நடிகை பிரமிளா
நடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் காவலாளியாக ( செக்யூரிட்டியாக )பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா. அந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. பிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவர்ச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ...
Read More »சிறிலங்காவில் மரண தண்டனை கவலையளிக்கறது!
சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39வது கூட்டத்தொடர் சுவிஸ்சலாந்தின், ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்திய போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக திருப்தியடைவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை ...
Read More »முப்படைகளின் அலுவலக பிரதானி விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு…!
முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை ...
Read More »அவுஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக்கன்றுகள் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக் கன்றுகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5000 பசுக்கன்றுகளில் 200 பசுக்கன்றுகளே உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் திட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்கஷவினால் கடந்த ...
Read More »இந்தியக் குழந்தைகளுக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலிய தம்பதிகள்!
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதாகும் எலிசபெத் புரூக் மற்றும் அவரது கணவர் 32 வயதாகும் ஆடம் புரூக் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை அந்நாடு இந்தியாவுடன் மீண்டும் தொடங்கவுள்ளது. எலிசபெத்தின் 14ஆம் வயதில் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ரோம் (polycystic ovarian syndrome) எனும் கருப்பை கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனும் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் ‘ராஜா ஹிந்துஸ்தானி’ இந்தி திரைப்படத்தை அவர் ...
Read More »சிறிலங்கா படையினர் உசார்நிலையிலேயே உள்ளனர்!-இராணுவ தளபதி
சிறிலங்கா இராணுவத்தினரின் தற்போதைய உசார் நிலை குறித்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ள விமர்சனங்களை இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க நிராகரித்துள்ளார். ஓய்வுபெற்றவர்களால் இராணுவத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். அவர்களிற்கு அதற்கான தார்மீக உரிமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவின் போது காணப்பட்ட முகாம்களை புதிய இடத்தில் மாற்றுவதையோ அல்லது புதிய இடத்தில் அமைப்பதையோ பலவீனமான விடயமாக கருதமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். களநிலைமைகளை கருத்தில்கொண்டு கட்டளை தளபதிகளின் உத்தரவிற்குஏ ஏற்ப அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை ...
Read More »ஏவுகணைகள் இல்லாத ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங்!
அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் ராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் அன்னை பாராட்டி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் திகதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும். இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது ...
Read More »மதுவுக்கு எதிரான ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’!
மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் அதை பாடியுள்ளார். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகின்றனர். ஆனாலும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ‘படிப்படியாக மதுவிலக்கு’ என அறிவித்து கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக தெரிவித்த தமிழக அரசும் வாக்குறுதியை மறந்து விட்டது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான கபிலன் மதுவுக்கு எதிராக, ‘ஏந்திரு ...
Read More »ஆஸ்திரேலியாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் ...
Read More »