அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில் இரவு வேளைகளில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. வீதிகள் பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பட்டை, தம்பிலுவில், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
உண்மையான பௌத்தர் எதையும் மீறமாட்டார்! -சுரேன் ராகவன்
வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் ...
Read More »தமிழர்களுக்கு உலக அரங்கில் ஆதரவு கிடைத்துள்ளது!
கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “சந்திரிகா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் ...
Read More »20 ஆவது திருத்தமேனும் நிறைவேற்றப்பட வேண்டும்!
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசியலமைப்பு நிபுணத்துவ குழு சமர்ப்பித்த அறிக்கையினை நேற்று நாடாளுமன்றத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார். குறித்த அறிக்கையில் எவ்விடயம் குறிப்பிடப்படடுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளாமலே மஹிந்த தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து இனவாத கருத்துக்களை மாத்திரமே சாட்டினார்கள். ஆகவே இவ் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது சாத்தியமற்றது. இன்றை அரசியல் நிலையில் புதிய அரசியலமைப்பு முக்கியம் ஆனால் அது முடியாத பட்சத்தில் மக்கள் விடு தலை முன்னணணியினர் சமர்ப்பித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ...
Read More »சவேந்திர சில்வா நியமனம் – மன்னிப்பு சபையின் கருத்து
சிறிலங்கா புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறாததை தடுப்பதற்கான யுத்தத்திற்கு பிந்திய பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது 58வது படைப்பிரிவின் தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா சர்வதேச மனிதாபிமான சட்ட ...
Read More »தாய்வான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்!
தாய்வானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நியமித்தார். தாய்வானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் ...
Read More »இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ரோகித் சர்மாவின் சதம் வீணானது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் ...
Read More »விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கினார்களா?
என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்தார். இதேவேளை, நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் கடந்த ...
Read More »சூடானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. ...
Read More »அன்டனோ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலி உறுப்பினர் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை!
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 ஆண்டுகளில் சிறையில் அனுபவிக்க முடியும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி ...
Read More »