சத்துருக்கொண்டான் படுகொலையின் 27 ஆவது வருட நினைவுதினம் மிகவும் குழப்பத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சத்துருக்கொண்டான் தூபிக்கு முன்பாக மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மீது வேறு சில நபர்களால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு எதற்காக இவர்கள் வர வேண்டும் இங்கு இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்களால் கோஷமிடப்பட்டது. சில விஷமிகளின் இந்த செயற்பாட்டினால் செய்வதறியாது இருந்த தமிழ் தேசிய பிரதிநிதிகள் எதுவும் தெரிவிக்காமல் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவு!
மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பதாக இணங்கியதை அடுத்து, நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் ...
Read More »போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும்! – இரா.சம்பந்தன்
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன என்பது உண்மை. அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் ...
Read More »பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது – வைகோ
“இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும் “இராமாயண ரகசியம்” ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஒன்றை வைகோ ஆற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ‘‘இராமாயணத்தில் இராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் ...
Read More »இசைப்பிரியா கைதான தகவல் – சரத் பொன்சேகா
படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளார்கள் என்ற ...
Read More »நான் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லை!- மகிந்த ராஜபக்ஷ
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் நாள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் அரசியலமைப்புத் தொடர்பாக முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தனக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும், தமிழர்கள் இணைந்து வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என தான் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பாக ...
Read More »கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதாம்!
“தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார். “சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு ...
Read More »சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் தீப்பற்றி எரிந்தது!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர் எனவும், வாகனம் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பிவிட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க
விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் மீளவும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுப்பதில் படையினர் சிரத்தை காண்பித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வன்முறைகள் தற்போது சவாலான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. பயங்கரவாதம் உலக அளவில் வியாபித்துள்ளமை துரதிஸ்டவசமானது. நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தத்தை இலங்கை அரச படையினர் ...
Read More »வாள்வெட்டுகள் குறித்து ஆராய்ந்த இராணுவ அதிகாரிகள்!
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26) வடமராட்சியில் நடைபெற்றுள்ளது. துன்னாலையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்பட்டதாக என்று கூறப்படுகின்றது.
Read More »