சத்துருக்கொண்டான் படுகொலையின் 27 ஆவது வருட நினைவுதினம் மிகவும் குழப்பத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சத்துருக்கொண்டான் தூபிக்கு முன்பாக மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மீது வேறு சில நபர்களால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு எதற்காக இவர்கள் வர வேண்டும் இங்கு இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்களால் கோஷமிடப்பட்டது.
சில விஷமிகளின் இந்த செயற்பாட்டினால் செய்வதறியாது இருந்த தமிழ் தேசிய பிரதிநிதிகள் எதுவும் தெரிவிக்காமல் சென்றுள்ளனர்.
கடந்த 09.09.1990 அன்று மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் கிராமத்தில் மிலேச்சத்தனமாக பிஞ்சுக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் என 186 அப்பாவிப்பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்ட துயர நாளின் 27 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.