ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. இந்த சூழலில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரும் போராட்டமாக உருவெடுத்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இராணுவச் சிப்பாய் கைது! வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளை!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்வம் இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்துள்ளார் அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கியதுடன் வீட்டுக்குள் ...
Read More »யாழ்ப்பாணத்தில் மர்மக்கும்பல் தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியது. அத்துடன் வீட்டிலிருந்த வயோதிபத்தம்பதியினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரன் வயது 70 செல்வராசாத்தி வயது 65 ...
Read More »மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி!
நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு ...
Read More »பாலித தெவரப்பெரும, ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!
களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது. உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண ...
Read More »பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்!
விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ...
Read More »காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும்!
காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து பல்கலைக்கழகமும் விவாதித்து வருகின்றன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் ...
Read More »ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ...
Read More »கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்!
வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும். சில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் ...
Read More »