இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது. அத்துடன், கொழும்பில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனாவால் இறப்போரில் அதிகளவானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
கொவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும் சதவீதமானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணரும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளருமான மருத்துவர் விந்தியா குமாரபெலி தெரிவித்துள்ளார். நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோர் குறித்து சுகாதார அமைச்சு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் கிளினிக்குகள் மூலம் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது ...
Read More »சீரற்ற காலநிலை காரணமாக திருமலையில் 3 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்
திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த படகில் 3 மீனவர்கள் இருந்ததாகவும் மாயமான படகைத் தேடி 20 படகுகள் காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மீன்வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு தாம் அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Read More »உகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்ற ...
Read More »’’கலப்பின அரிசியின் தந்தை’’ காலமானார்
“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது 91 ஆகும். அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் செய்தியில், “யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 1950இல் 56.9 மில்லியன் தொன்னிலிருந்து 2017.ல் 194.7 மில்லியன் தொன்னாக உயர்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் கிலோ அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வருடாந்த அதிகரிப்பு 60 மில்லியனுக்கும் அதிகமான ...
Read More »இந்திய கிரிக்கெட்டுக்கு இன்சமாம் பாராட்டு – ஆஸ்திரேலியா செய்யாததை சாதித்துள்ளது
இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 2-ந் தேதி வீரர்கள் புறப்பட உள்ளனர். இந்த நிலையில் அதே ...
Read More »இத்தீவில் எந்த காவல்துறை கடமையாற்றப் போகிறார்கள்?
சீனாவின் கடன் காலனித்துவத்திற்குள் வீழ்ந்து கிடக்கின்றது சிறிலங்கா அரசாங்கம் என தமி;ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம், தமிழர் தாயக பகுதிகளில் தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புக்கான தளங்களையோ உருவாக்க பின்னடிக்கிறது. பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் தமது முதலீட்டில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க தயாராக இருக்கின்றர், ஆனால் அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையின் சட்டதிட்டங்கள் அதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது. Port City விவகாரம் என்பது ...
Read More »அதிகாரத்தை மத்தியில் குவிப்பதில் எதுவித அர்த்தமுமில்லை!
தமிழ்மக்களிற்கு தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பெரும்பாலான எதிர்கட்சி உறுப்பினர்களைப்போலன்றி நாம் இச்சட்டமூலத்தை வேறு விதமாகவே அணுகுகிறோம். எங்களது பார்வையில் ஒரு சிறியநாடாகவுள்ள இலங்கை சர்வதேசஅளவிலான பொருண்மியப் போட்டிகளை எதிர்கொள்வதானால் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவதுபற்றிச் சிந்திக்க வேண்டிள்ளது. குறிப்பாக கொரோணா பெருந்தொற்று காரணமாக உலகளவில் பொருண்மிய வீழ்ச்சி ...
Read More »நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர். நாடாளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட ...
Read More »இலங்கை நாளை இரவு முதல் 3 தினங்கள் முடங்குகிறது!
நாட்டிலுள்ள கொவிட் ; நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை ; இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 ...
Read More »